சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்க வேண்டி - விநாயகர் கோயில்களில் இந்து முன்னணியினர் மனு :

தூத்துக்குடி 2-ம் கேட் அருகேயுள்ள வரத விநாயகர் கோயிலில் மனு அளித்த இந்து முன்னணி நிர்வாகிகள். 			     படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி 2-ம் கேட் அருகேயுள்ள வரத விநாயகர் கோயிலில் மனு அளித்த இந்து முன்னணி நிர்வாகிகள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்க வேண்டி தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் கோயில்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்க வேண்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் தூத்துக்குடி நகரில் உள்ள விநாயகர் கோயில்களில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி நிர்வாகிகள் ராகவேந்திரா, சரவணகுமார், இசக்கி முத்துக்குமார், மாதவன், ஆறுமுகம், நாராயணராஜ், பலவேசம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். விநாயகர் சிலைகள் முன்பு மனுக்களை வைத்து வழிபட்ட பிறகு அவற்றை கோயில் பூசாரிகளிடம் வழங்கினர்.

கோவில்பட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in