பள்ளி மாணவர்களுக்கு - தமிழ் இலக்கணம் நடத்திய சிவகங்கை ஆட்சியர் :

சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம் நடத்திய ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.
சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம் நடத்திய ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.
Updated on
1 min read

சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் தமிழ் இலக்கணம் நடத்திக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்ததும் ஆட்சியர் மாணவர்களுக்கு சிறிது நேரம் தமிழ் இலக்கணம் நடத்தினார். பிறகு கேள்விகளுக்குப் பதிலளித்த மாணவர்களை ஆட்சியர் பாராட்டினார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான ஆட்சியர் தமிழ் இலக்கணம் நடத்தியது அதிகாரிகள், ஆசிரியர்களை ஆச்சரியப்பட வைத்தது. தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 415 பள்ளிகள் திறக்கப்பட்டு, 5,443 ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் 26 ஆயிரம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் 14 ஆயிரம் மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

மாவட்டத்தில் 82 மாணவர் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in