

தேனி மாவட்டம் மேகமலை வனப் பகுதியில் விவசாயம் செய்ய விடாமல் வனத்துறையினர் தடுப்பதாகக் கூறிதேனியில் உள்ள வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்காப்பக துணை இயக்குநர்அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், வன நிலங்களில் இருந்து பழங்குடியினரையும், விவசாயிகளையும் வெளியேற்றக்கூடாது என்று வலியுறுத்தினர்.