கரூர், அரியலூர் மாவட்டங்களில் காலியாக உள்ள - உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு :

கரூர், அரியலூர் மாவட்டங்களில் காலியாக உள்ள -  உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு :
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டார். இதில்மொத்தம் 44,326 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டு உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி சித்தலவாய் ஊராட்சித் தலைவர் மற்றும் 11 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.

இவற்றுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம் பெற்றுக்கொண்டார். இந்த 15 இடங்களிலும் மொத்தம் 21,261 ஆண்கள், 23,061 பெண்கள், 4 இதரர் என மொத்தம் 44,326 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்,

அரியலூர் மாவட்டத்தில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in