Published : 01 Sep 2021 03:18 AM
Last Updated : 01 Sep 2021 03:18 AM
பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் தற்காலிக கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸாரும், ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அளித்த மனு:
பாளையங்கோட்டையில் தசரா திருவிழா அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் அணிவகுத்து நிறுத்தப்படும். அங்கு தற்காலிக கடைகள் அமைத்தால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே தற்காலிக கடைகளை வேறுஇடத்தில் அமைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் வரகுணன் அளித்த மனு:
ஜவஹர் திடலில் தற்காலிக கடைகள் அமைத்தால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வசதியாக இருக்கும். இத்திடலுக்குள் சப்பரங்கள் வருவது கிடையாது. மைதானத்தின் ஓரங்களில் மட்டுமே சப்பரங்கள் பவனி வரும். இதனால் யாருக்கும் இடையூறு கிடையாது. ஜவஹர் மைதானத்தின் உள்புறத்தில் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதுபோல் தற்காலிக கடைகளை அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொதுசெயலாளர் சுந்தர் தலைமையில் அளித்த மனு:
தென்மாவட்டங்களில் இருந்து கேரளத்துக்கு மணல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் நாள்தோறும் கடத்தப்பட்டு வரு கிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாறைகளை உடைத்து லாரிகளில் கேரளத்துக்கு அனுமதியின்றி கொண்டு செல்கிறார்கள். கனிம வளங்கள் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையில் தசரா திருவிழா அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் அணிவகுத்து நிறுத்தப்படும். அங்கு தற்காலிக கடைகள் அமைத்தால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT