திருவண்ணாமலை மாவட்டத்தில் - கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு : ஆட்சியர் பா.முருகேஷ் வேதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் -  கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு  :  ஆட்சியர் பா.முருகேஷ் வேதனை
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித் துள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவ லகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “கரோனா 2-வது அலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது மற்றும் முகக்கவசம் அணியாமல் இருந்ததுதான் காரணம். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதிகளில் 60 முதல் 65 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நகராட்சியை தவிர்த்து பிற பகுதியில் வசிக்கும் 18 லட்சம் பேரில் 7.47 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளது. இது 36 சதவீதம் ஆகும். தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி 50 சதவீதத்தை கூட அடைய முடியவில்லை. 64 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கிராமத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், செலுத்திக் கொள்ளாதவர்கள் விவரங்கள் பட்டியலை தினசரி அனுப்பி வைக்க வேண்டும் என வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வந்தவாசி, கலசப்பாக்கம் மற்றும் செய்யாறு வட்டாட்சியர்கள், விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்களின் பணியை கண்காணித்து இருந்தால் வட்டாட்சியர் திணற வேண்டிய அவசியம் இருக்காது.

50 சதவீதமாக உயர்த்த வேண்டும்

கடைகள் மூட நடவடிக்கை

சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணியில் குப்பைகள் குவிந்துள்ளதை கண்கூடாக பார்த்துள்ளேன். அதனை பார்க்கும்போது குறிப்பிட்ட ஒரு நாளில், குப்பை சேர்ந்ததாக தெரியவில்லை. கழிவுநீர் வழிந் தோடுகிறது. குப்பைகள் சேகரித்து அகற்றுவதில் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் சரியாக செயல்படவில்லை.

அடுத்த முறை, குப்பைகள் குவிந்திருப்பது தெரியவந்தால், நகராட்சி ஆணையாளர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்வேன். புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புவதுடன் பணி முடிந்துவிட்டதாக கருதக்கூடாது. கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in