சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து - மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து -  மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

ஏழை, நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதிக்கும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், காஸ் சிலிண்டர் விலையை பாதியாக குறைக்க வலியுறுத்தியும் பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காவிரி நாடன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் வீ.ஞானசேகரன், திராவிடர் கழகம் தங்கராசு, விசிக விவசாய அணி மாநிலச் செயலாளர் வீர செங்கோலன், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் பேசினர். மகஇக கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல, கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் தலைமையிலும், தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாநகர ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in