

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனிதூய வேளாங்கண்ணி ஆரோக்கியஅன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் கொடியேற்றி வைத்தார். விழாவில் தினமும் காலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலி இறைமக்கள் பங்கேற்பின்றி நடைபெறும். வரும் 05.09.2021 மாலை 6 மணிக்கு நற்கருணை பெருவிழா தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறும். விழா நிகழ்வுகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரோசின் அ.கற்றார் மற்றும் பக்த சபையினர், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
வேளாங்கண்ணி கெபி