பெரியபட்டில் - வேன் மோதி தம்பதி உயிரிழப்பு :

பெரியபட்டில்  -  வேன் மோதி தம்பதி உயிரிழப்பு :
Updated on
1 min read

புதுச்சத்திரம் அருகே உள்ள ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜமாணிக்கம் (50), அவரது மனைவி ஆரியமாலா (46) நேற்று சிதம்பரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற வேனின் டயர் திடீரென வெடித்தது. நிலைதடுமாறிய வேன் பைக்கில் வந்ததம்பதி மீது மோதியது. இதில் ராஜமாணிக்கம், அவரது மனைவி ஆரியமாலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத் தைச் சேர்ந்த 100-க்கும் மேற் பட்டோர் சிதம்பரம்- கடலூர் நெடுஞ்சாலையில் பெரியபட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புதுச்சத்திரம் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in