ராமநாதபுரத்தில் மினி மாரத்தான் :

ராமநாதபுரத்தில் மினி மாரத்தான் :
Updated on
1 min read

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட மல்லர் கழகம் இணைந்து தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தின. 60 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் நோமன் அக்ரம், ஆயிர வைசிய மகாசபை தலைவர் மோகன், டிடி.விநாயகர் தொடக்கப்பள்ளி தாளாளர் அபர்ணா வெங்கடாச்சலம், அரசு மருத்துவமனை பெண்கள் பாதுகாப்பு ஒருங் கிணைப்பாளர் மோகனப்பிரியா, அரிமா சங்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மல்லர் கழகச் செயலாளர் லோகசுப்பிரமணியன், முத்தாலம்மன் கிராமியக் குழு செயலாளர் தனசேகரன் ஆகியோர் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in