Published : 30 Aug 2021 03:16 AM
Last Updated : 30 Aug 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி களை துரிதப்படுத்த வேண்டும், நோய் தொற்று அதிகரித்து வரும் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து, அங்கு நோய் தடுப்புப்பணிகளை தீவிரப் படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார்.
மேலும், செப்டம்பர் 1-ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தினசரி 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சுகா தாரத்துறையினர் செய்து வந்த நிலையில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (ஆக.30-ம் தேதி) முதல் தொடங்குகிறது.
இந்நிலையில், ஆம்பூர் வட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் நே்றறு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது. “திருப் பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கரோனா தொற்று மீதான பயம் பொதுமக்களிடம் படிப்படியாக குறைந்து விட்டதால் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். எனவே, குக்கிராமங்கள் உட்பட அனைத்து பகுதியிலும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் நாளை (இன்று) முதல் தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும், முதற்கட்டமாக 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 144 இடங்களில், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்குகிறது. இந்த முகாமை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களையும், மற் றவர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசின் நடவடிக்கை களுக்கு மக்கள் முழ ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.
அப்போது, ஆம்பூர் வட்டாட் சியர் அனந்தகிருஷ்ணன் உடனி ருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT