வேப்பம்பட்டு ஊராட்சியில் பூங்கா,விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை :

வேப்பம்பட்டு ஊராட்சியில் பூங்கா,விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை :
Updated on
1 min read

89 வேப்பம்பட்டு ஊராட்சியில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகியும், இதுவரை அவை அமைக்கப்படவில்லை. எனவே, தற்போது பதவியேற்றுள்ள அரசு தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 89 வேப்பம்பட்டு ஊராட்சியில், கடந்த 1987-ம் ஆண்டு டன்லப் நகரில், 33 ஏக்கர் பரப்பளவில் அரசு அங்கீகாரம் பெற்ற சுமார் 350 வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டன.

இந்த மனையைச் சுற்றி பல வீட்டுமனைப் பிரிவுகள் அமைந்துள்ளன. இவற்றில், சுமார் ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டு, மக்கள் குடியேறி வசித்து வருகின்றனர். குழந்தைகள் விளையாடவும், பொதுமக்கள் மற்றும் முதியோர்நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காகவும், பூங்கா அமைப்பதற்காக 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் ஒதுக்கப்பட்டது.

34 ஆண்டுகளாக..

ஆனால், இதுவரை பதவி வகித்து வந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை அவர்களதுகோரிக்கையை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அரசாவது தங்களது இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in