

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சார்- ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
சிதம்பரம் அருகே உள்ளபள்ளிப்படை மற்றும் கொத்தங் குடி ஊராட்சிக்கு உட்பட்ட தில்லை யம்மன் நகரில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிறுவனம் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக் கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிதம்பரம் சார்- ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மனு அளித்தனர். செல்போன் கோபுரத்தின் கதிர்வீச்சால் பொது மக்களுக்கு பல்வேறு நோய் களால் பாதிப்புகள் ஏற்படும் என்று மனு அளித்தனர். பள்ளிப்படை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், கொத்தங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேணுகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தனியார் பள்ளி தாளாளர் நடராஜன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மோகன், தில்லை அம்மன் நகரில் வசிக்கும் பாண்டியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.