மிரட்டல் விடுப்பதாகதனியார் நிதி நிறுவனம் மீது புகார் :

மிரட்டல் விடுப்பதாகதனியார் நிதி நிறுவனம் மீது புகார் :
Updated on
1 min read

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் இப்ராஹிம் பாதுஷா. கரோனா ஊரடங்கு காலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தவணைத் தொகை கேட்டு தனியார் நிதி நிறுவனம் வற்புறுத்திய நிலையில், அந்த நிறுவனத்துக்கு எதிராக போராடி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த இருவர், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், நிதி நிறுவனத்துக்கு எதிராக போராடக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்ததாகக் கூறி, வடக்கு காவல் நிலையத்தில் நேற்று அவர் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in