தோல்வியை வெற்றியாக்கும் திறமை தேமுதிகவுக்கு உண்டு : திருப்பூரில் விஜயபிரபாகரன் உறுதி

தோல்வியை வெற்றியாக்கும் திறமை தேமுதிகவுக்கு உண்டு :  திருப்பூரில் விஜயபிரபாகரன் உறுதி
Updated on
1 min read

தோல்வியை வெற்றியாக்கும் திறமை தேமுதிகவுக்கு உண்டு என்று திருப்பூரில் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நடைபெற்றநலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், அவரது மகன் விஜயபிரபாகரன் பேசினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் டைமண்ட் திரையரங்கம் மற்றும் பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நேற்றுநடைபெற்றது. அதில், நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கிய பின்னர் விஜயபிரபாகரன் பேசியதாவது:

விஜயகாந்தின் 69-வது பிறந்தநாளை திருப்பூரில் தொண்டர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பானதுதான். தேமுதிக எனும் வேர் என்றும் அழியாது, அந்த வேர் ஆலமரமாக வளரும். எத்தனை பேர் கட்சியை விட்டு சென்றாலும், ஆலமரம் வளரும். சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளார். மிக விரைவில் பழைய நிலையில், விஜயகாந்த் அரசியலுக்கு திரும்புவார். இளைஞர்களுக்கு உறுதுணையாக தேமுதிக இருக்கும். சமூக வலைதளங்களை பயன்படுத்தி, கட்சியை மேலும் வளர்ப்போம். விஜயகாந்தை பார்த்து, இன்றைக்கு பலர் அரசியலுக்கு வருகின்றனர்.

எங்களுக்கு காசு, பணம் தேவையில்லை, தமிழக மக்களின் அன்பு போதும். நீங்கள், என்னை தூக்கி எறிந்தாலும் சுவற்றில் அடித்த பந்துபோல திரும்ப உங்களிடம் வருவேன். தோல்வியை வெற்றியாக்கும் திறமை தேமுதிகவுக்கு உண்டு. 40 ஆண்டுகள் சினிமாவிலும், 15 ஆண்டுகள் அரசியலிலும் போராடுகிறார் விஜயகாந்த். விருப்பு, வெறுப்புகளை மறந்து, 2006-ல் இருந்ததைப்போல நம் கட்சியை வலுப்படுத்த அனைத்து நிர்வாகிகளும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in