அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி - இளைஞர் உயிரிழப்பு: 7 பெண்கள் படுகாயம் :

அரசு பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதி -  இளைஞர் உயிரிழப்பு: 7 பெண்கள் படுகாயம் :
Updated on
1 min read

கடலூர் தொண்டமாநத்தம் பகுதி யைச் சேர்ந்த பெண் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை ஷேர் ஆட்டோவில் ஏற்றி விட்டு, அதில் அவர்களும் அமர்ந்து நேற்று காலை கடலூர் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக சென்றனர்.

கடலூர்- விருத்தாசலம் சாலை அன்னவல்லி பகுதியில் ஷேர் ஆட்டோவுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நிறுத்தப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக ஷேர் ஆட்டோ பேருந்தின் பின் பக்கத்தில் மோதியது.

இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த தொண்டமானந்தம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சூர்யா (20) உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் இந்திரா (32), வீரம்மாள் (70), வசந்தா (64), வினோதினி (27), கஸ்தூரி (57), சவுந்தரி (40), கணேசமூர்த்தி (38), ஷேர் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in