Regional02
காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது :
திருப்பத்தூரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடப்பதாக நகர காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகர காவல் துறையினர் நேற்று பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் நகரைச் சேர்ந்த கண்ணையன்(60), ஆலங்காயம் ரோடு பகுதியைச் சேர்ந்த பாரூக்(35), ஆரிப் நகரைச் சேர்ந்த லியாகத்(45) ஆகியோரை காவல் துறையினர்கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 605 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
