வியாழன், பிப்ரவரி 13 2025
Last Updated : 24 Aug, 2021 03:15 AM
Published : 24 Aug 2021 03:15 AM Last Updated : 24 Aug 2021 03:15 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 421 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 3 லட்சத்து 18 ஆயிரத்து 321 தடுப்பூசிகளும், இரண்டாம் தவணையாக 79 ஆயிரத்து 140 தடுப்பூசிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 7 ஆயிரத்து 752 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கரோனா தடுப்பூசி மையம் நேற்று தொடங்கப்பட்டது. தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் இவற்றை தொடங்கி வைத்தார். டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
இம்மையத்தில் 8 மணி நேர சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT