

சேலம் மாவட்டத்தில் 24 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட மேலாளர் (நீதியியல்) வட்டாட்சியர் திருமாவளவன், ஆட்சியர் அலுவலக மாவட்ட மேலாளராக (பொது), மாவட்ட மேலாளர் (பொது) பெலிக்ஸ் ராஜா, கேபிள் டிவி வட்டாட்சியராகவும், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் சிராஜூதீன், மாவட்ட மேலாளராக (நீதியியல்) மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தனி வட்டாட்சியர் (நில எடுப்பு- தேசிய நெடுஞ்சாலை 68) நர்மதா, சேலம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தலைவாசல் வட்டாட்சியர் அன்புசெழியன், ஆத்தூர் கோட்டாட்சியரின் நேர்முகஉதவியாளராகவும், சங்ககிரி வட்டாட்சியர் விஜி, மேட்டூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், வாழப்பாடி வட்டாட்சியர் மாணிக்கம், ஆத்தூர் வட்டாட்சியராகவும், ஆத்தூர் வட்டாட்சியர் வரதராஜன் வாழப்பாடி வட்டாட்சியராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், எடப்பாடி தனி வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்புத் திட்டம்) வாசுகி, காடையாம்பட்டி வட்டாட்சியராகவும், ஆத்தூர் தனி வட்டாட்சியர் (ஆதி திராவிடர் நலம்) சுமதி, தலைவாசல் வட்டாட்சியராகவும், சேலம் தனி வட்டாட்சியர் (சாலை பிரிவு) பானுமதி, சங்ககிரி வட்டாட்சியராகவும் பணியிடம் மாற்றம் செய்து சேலம் ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.