டிராக்டர் மோதி இளைஞர் மரணம் :

டிராக்டர் மோதி இளைஞர் மரணம் :

Published on

பரமக்குடி கவுரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரன் மகன் பாலாஜி (26). திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முருகானந்தம் மகன் தினேஷ்குமார் (26). இருவரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் எமனேசுவரம் நேருஜி மைதானம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் பாலாஜி உயிரிழந்தார். தினேஷ்குமார் படுகாயமடைந்தார். டிராக்டர் ஓட்டுநர் பொன்னையாபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in