

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், பள்ளிக்கல்வித் துறை சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை, டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்த கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் கலந்துகொள் ளும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வருகிற 28-ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தென்காசி மட்டப்பா தெருவில் உள்ள வ.உ.சி. வட்டார நூலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்த படைப்புகள் விழா மலரில் இடம்பெறும். கட்டுரை நான்கு பக்க அளவிலும், கவிதை இரண்டு பக்க அளவிலும், ஓவியம் ஒரு பக்க அளவிலும் இருத்தல் வேண்டும் என்று நூலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.