

திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுசிறுமி காணாமல் போய்விட்டதாக, தந்தை அளித்த புகாரின்பேரில் மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், பரமசிவம்பாளையத்தை சேர்ந்த கதிரேசன் (40) என்பவர், சிறுமியை சமயபுரம் அழைத்துச் சென்று திருமணம் செய்ததும், பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
பின்னர், ஒட்டன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சிறுமியை விட்டுவிட்டு அவர் தப்பிவிட்டார்.
இதுதொடர்பாக போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, திண்டுக்கல் பகுதியில் பதுங்கியிருந்த கதிரேசனை, மங்கலம் போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.