யானை தந்தங்களை கடத்த முயன்ற 5 பேர் கைது :

வாழப்பாடி அருகே காரில் யானை தந்தங்களை கடத்த முயன்றபோது கைதான 5 பேர் (உட்கார்ந்து இருப்பவர்கள்) மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களுடன் வனத்துறையினர்.
வாழப்பாடி அருகே காரில் யானை தந்தங்களை கடத்த முயன்றபோது கைதான 5 பேர் (உட்கார்ந்து இருப்பவர்கள்) மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களுடன் வனத்துறையினர்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து யானை தந்தங்கள் கொண்டு வரப்பட்டு கோவை யில் விற்பனை செய்யப் பட உள் ளதாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை தனிப்படைக்கு தகவல் வந்தது.

வாழப்பாடி அடுத்த முத்தம் பட்டி சுங்கச் சாவடி பகுதியில் இரு மாவட்ட வனத் துறையினரும் இணைந்து நேற்று முன்தினம் இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கோதுமலை தெற்கு வனப்பகுதி வழியாக காரில் வந்த கும்பலை மடக்கிப் பிடித்து காரில் சோதனை செய்தனர். இதில், 5 மற்றும் 6.150 கிலோ எடையுள்ள இரு யானை தந்தங்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், யானை தந்தங்களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விளக்கூரைச் சேர்ந்த சசிகுமார் (22), ராமநாதபுரம் மாவட்டம் புழுதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (24), சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டிணம் பரத் (23), வீரக்கல்புதூர் பிரவீன்குமார் (21), மாதையன்குட்டை சேட்டு ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சமாகும். தந்தங்களை வாங்க வந்தவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in