

அரியலூர் மாவட்டம் புரந்தான் அருகேயுள்ள அரங்கோட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம்(70). இவர் நேற்று முன்தினம் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த உறவினர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த சுந்தரம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சுந்தரத்தை கைது செய்தனர்.