

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி(60), லலிதா(80) ஆகியோர் அப்பகுதியில் நேற்று ஆடு மேய்த்துள்ளனர்.
அப்போது, மழை பெய்துகொண்டிருந்தது. இதில், மின்னல் தாக்கியதில் ஜோதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மயங்கி கிடந்த லலிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.