குலசேகரன்பட்டினத்தில் - உடல் நலக்குறைவால் யானை மரணம் :

குலசேகரன்பட்டினத்தில் -  உடல் நலக்குறைவால் யானை மரணம் :
Updated on
1 min read

குலசேகரன்பட்டினத்தில் தனியாருக்கு சொந்தமான பெண் யானைபவானி (42) இருந்தது. முத்தாரம்மன் கோயில், மசூதி கந்தூரிதிருவிழா மற்றும் உடன்குடி பகுதியில் நடக்கும் திருவிழாக்களில் இந்த யானை கலந்துகொள்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் யானைக்கு காலில் புண் ஏற்பட்டது. முறையான மருத்துவ வசதி இல்லாமல் அவதியுற்று வருவதாக அந்த பகுதி மக்கள் மாவட்டஆட்சியருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து கால்நடைத் துறை அதிகாரிகள் மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், யானைபவானி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்தது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குலசேகரன்பட்டினத்தில் உள்ள செய்யது சிராஜூதீன் ரலியல்லாஹு அன்ஹு பள்ளிவாசல் தர்ஹா வளாகத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பள்ளிவாசலில் யானை பவானி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in