

உடுமலை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் மும்மூர்த்தி வழிபாடு பிரசித்திபெற்றது.
இக்கோயிலில் அர்ச்சனைக் கட்டணம்,உண்டியல் காணிக்கை, பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, கோயில் வளாகக் கடைகள், வாகனங்களுக்கு விதிக்கப்படும்நுழைவு வரி, அருவிக்கு செல்ல நுழைவுக் கட்டணம் எனப்பல வகையில் ஆண்டுக்குசுமார் ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது. கரோனா பரவல் எதிரொலியாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, கோயில் செயல் அலுவலர் நாகையா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் மூலம் தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது’’ என்றார்.