

கோத்தகிரி பேருந்து நிலையத்தில் கடந்த ஒருவாரமாக கரடி உலா வருகிறது. அருகே உள்ள வளம் மீட்பு பூங்காவுக்குள் கரடி நுழைவதால், அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, கோத்தகிரி வளம் மீட்பு பூங்கா பகுதியில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். கூண்டுக்குள் பழங்கள், தேன் வைத்து, கண்காணித்து வருகின்றனர்.