

திருப்பூரில் உள்ள வங்கிகளில் கடனுதவி கோரி சாலையோர வியாபாரிகள் 4,826 பேர்விண்ணப்பித்துள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் நடவடிக்கைமேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக வங்கி மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். பிரதமரால்அறிமுகப்படுத்தப்பட்ட, புதியதிட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள்மூலம் ரூ.10 ஆயிரம் கடனுதவிவழங்க,விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம்செய்யப்பட்டு, வங்கிகளுக்குஅனுப்பப்பட்டுள்ளது. இம்மாத (ஆகஸ்ட்) இறுதிக்குள், அனைத்துவங்கி மேலாளர்களும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, வியாபாரிகளுக்கு கடன் தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்என ஆணையர் அறிவுறுத்தி னார். திருப்பூரில் 4,826 வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சிதரப்பில் தெரிவிக்கப்பட்டது.