திருப்பூரில் சாலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் :

திருப்பூரில் சாலைப் பணிகளை  தடுத்து நிறுத்திய பொதுமக்கள் :
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டு சோளிபாளையம் பாட்டையப்பா நகரில், மாநகராட்சி பொதுநிதியில் கடந்த சில நாட்களாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலைப் பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாகக்கூறி, பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் பார்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். விஜயகுமாரிடம், ‘சாலை தரமில்லை, இந்த சாலை விரைவில் பழுதடைந்துவிடும். எனவே தரமான வகையில் சாலை அமைக்க வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் சாலையை தரமான வகையில் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in