Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

தரச்சான்று பெற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ISO9000, ISO14001, ISO22000, HACCP, GHP, BIS, ZED உள்ளிட்ட சர்வ தேசதரச் சான்றுகள் பெற செலுத்தும்கட்டணத்தில், ஒவ்வொரு சான்றுக்கும் புதிய திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியம் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம்) வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுளளது.

ஏற்கெனவே தரச்சான்று பெற்ற நிறுவனங்கள், மீண்டும் அவற்றைப் பெற சான்று பெற்ற தேதியில் இருந்து ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கலாம்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், பிளாஸ்டிஸ் மோல்டிங் நிறுவனங்கள், மின் மற்றும் மின்னணு உற்பத்தி நிறுவனஙகள்,அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், நவீனஅரிசி ஆலைகள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தரச்சான்று திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம். இதற்காக https://www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் (தொலைபேசி எண். 044-27238837)' என்ற விலாசத்தில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x