Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

புதுச்சேரி காமராஜர் சாலையில் ஆண்களுக்கான பிரத்யேக - ‘ மகா மென்ஸ்வேர்’கார்மெண்ட் ஷோரூம் : முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

புதுவை காமராஜ் சாலையில் ‘ மகா மென்ஸ் வேர்’ ஜவுளிக் கடையை குத்து விளக்கேற்றி திறந்து வைக்கும் முதல்வர் ரங்கசாமி. அருகில் அதன் உரிமையாளர் குகன் உள்ளிட்டோர்.

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர் சாலையில் ஆண்களுக்கான பிரத்யேக கார் மெண்ட் ஷோரூமை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரி காமராஜர் சாலையில் ஜாய் ஆலுக்காஸ் நகை கடைஅருகே புதிதாக ‘மகா மென்ஸ்வேர்’ என்ற பெயரில் ஆன்களுக்கான பிரத்யேக கார்மெண்ட் ஷோரூம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஜான்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் சப்தகிரி ராமலிங்கம், நேரு, ஏ.கே.டி ஆறுமுகம், சிவசங்கரன், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், நேரு வீதி வியாபாரிகள் சங்க தலைவர் நமச்சிவாயம், துணை தலைவர் இசைக்கலைவன் மற்றும் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபார பிரமுகர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். முன்னதாக விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் ‘ மகா மென்ஸ்வேர்’ ஜவுளிக்கடை உரிமையாளர் குகன் வரவேற்றார்.

ஆண்களுக்கென புதிதாகதிறக்கப்பட்டுள்ள இந்த ஜவுளிக்கடையில் ஆண்களுக்கான அனைத்து வகை ஆடைகளும், புதிய டிசைன்களில் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவையொட்டி நேற்று 5 சர்ட்டுகள், 3 ஜீன்ஸ் பேண்டுகள் ரூ.999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் நேற்று முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அனைத்து ஆடைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x