திண்டுக்கல் நகர பஸ்களில் 1,41,309 மகளிர் இலவச பயணம் :

திண்டுக்கல் நகர பஸ்களில் 1,41,309 மகளிர் இலவச பயணம் :
Updated on
1 min read

திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,857 மனுக்கள் வந்தன. இதில், 928 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகளில் தினமும் 1,41,309 மகளிர் கட்டணம் இன்றி பயணம் செய்து பயன் பெறுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பயண சலுகை அமல் படுத்தப்பட்டதன் மூலம் தினமும் 1,190 பேர் பயனடைகின்றனர் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in