Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM

ராஜீவ் காந்தி சிலை, படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை :

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் நேற்று அவரது சிலை, படங்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மாியாதை செலுத்தினர்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில், மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் தெற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன், மாநில துணைத் தலைவர் சுப.சோமு, முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்டப் பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச் செயலாளர்கள் சரவணன், முரளி, இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ரெக்ஸ், முன்னாள் கவுன்சிலர் ஹேமா, மகளிர் அணி நிர்வாகிகள் ஷீலா, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டம் குளித்தலையில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையிலும், லாலாபேட்டையில் ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலும் ராஜீவ் காந்தியின் படத்துக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் சின்னையன், வட்டாரத் தலைவர் சி.த.ஆறுமுகம் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட துணைத் தலைவர் கோ.அன்பரசன் தலைமையில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மோகன்ராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் நா.பழனி வேல், ஆர்.கோவிந்தராஜ், சதா.வெங் கட்ராமன், ரமேஷ், மோகன் தாஸ், முருகானந்தம், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், அனைவரும் மத நல்லி ணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கும்பகோணத்தில்...

கும்பகோணம் காவேரி நகரில் உள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு, மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், வட்டாரத் தலைவர்கள் பாலதண் டாயுதம், சசிகுமார், மாநில பொதுக் குழு உறுப்பினர் தியாகராஜன், நகர துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜான் கவுஸ் சாஹிப் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்டச் செயலாளர் நவுஷாத் பேசினார். நிகழ்ச்சியில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதில், மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஜலாலுதீன், நாகை மாவட்ட துணைத் தலைவர் வரதராஜன், விவசாய பிரிவு மாவட்ட அமைப்பாளர் நிக்கோலஸ், சிறுபான்மைத் துறை மாவட்டத் தலைவர் மக்சூத் சாஹிப், மாவட்ட மனித உரிமை துறை துணைத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில், நகரச் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

காரைக்காலில்...

காரைக்கால் ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் படத்துக்கு, புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநா யகம், முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந் தோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நல்லி ணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x