

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(31). இவர், தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஊத்தங்கரையைச் சேர்ந்த அனிதா(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு நவீன்குமார் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நவீனின் கொடுமை அதிகரித்ததால் மனமுடைந்த அனிதா, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.