பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி 37-வது ஆண்டு விருது வழங்கும் விழா :

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுடன் அறக்கட்டளையின் தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் வி.பாலுசாமி.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுடன் அறக்கட்டளையின் தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் வி.பாலுசாமி.
Updated on
1 min read

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 37-வது ஆண்டு விருது வழங்கும் விழா கல்லூரியின் மஹாராஜா அரங்கில் நடைபெற்றது.

கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளையின் தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.பாலுசாமி ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

கல்லூரியில் இறுதியாண்டு முடித்து வெளியேறும் மாணவர்களில் சிறந்தவராக ஆல் வின் ஜெ.ஆண்டனி மற்றும் மாணவிகளில் சிறந்தவராக ஈ.ஆர்.சாந்தினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்லூரி சார்பில் தலா ஒரு சவரன் தங்க நாணயமும், ரொக்கமும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விளையாட்டில் சிறந்த மாணவ,மாணவியருக்கும், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த மாணவருக்கும் மற்றும் துறை வாரியாக சிறந்த ஆசிரியர்களுக்கும், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் மற்றும் தங்க நாணயத்துடன் ரொக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில், கல்லூரி முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி கல்லூரியின் இணையதளத்தில் நேரலையில் தொகுத்து வழங்கப்பட்டது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in