கோயில் குளம் மீட்கக்கோரி போராட்டம் :

விழுப்புரத்தில் கோயில் குளத்தை மீட்கக் கோரி  ஐய்யனார் கோயில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் கோயில் குளத்தை மீட்கக் கோரி ஐய்யனார் கோயில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் கோயில் குளத்தை மீட்கக் கோரி ஐய்யனார் கோயிலில் மனு அளிக்கும் நூதனப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

விழுப்புரம் திரு.வி.க.வீதியில் உள்ள ஐயனார் கோயிலின் தினசரி வழிபாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐய்யனார் குளத்தை ஆஞ்சநேயர் கோயில் குளமாக மாற்றி, 2002 ம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பட்டா மாற்ற ஆணையை ரத்து செய்யக்கோரி ஐய்யனார் கோயில் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் தலைமையில் நேற்று ஐய்யனார் கோயிலில் மனு அளிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. கரிகால சோழன் பசுமை மீட்புப் படை அகிலன், யாதும் ஊரே யாவரும் கேளிர் நாராயணன் விழுப்புரம் சிட்டி ரஃபி, இயன்றதைச் செய்வோம் நத்தர்ஷா, நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவம் கண.சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in