

விருத்தாசலத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூர் ஏனாதிமேடு பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது குறுவை சாகுபடி பட்டத்துக்கு கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்திறக்கக்கோரி நேற்று விருத்தாசலம் சார்- ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்துவிருத்தாசலம் போலீஸார் சம்பவஇடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.