

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வழிமத்தூரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (36). விவசாயியான இவர் நேற்று மாலை சீந்திவயல் பேருந்து நிறுத்தம் அருகே வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் மகாலிங்கம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருவாடானை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.