வேலூரில் கரோனா தடுப்பூசி முகாம் :

வேலூரில் கரோனா தடுப்பூசி முகாம் :
Updated on
1 min read

வேலூரில் உள்ள மாவட்ட செஞ்சிலுவை சங்க அலுவல கத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு இந்தியன் செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளையின் துணைத் தலைவர் எம்.வெங்கடசுப்பு தலைமை தாங்கினார். செயலாளர் பி.டிகே.மாறன் வரவேற்றார். மாநகர சுகாதார அலுவலர் மணிவண்ணன், தமிழ்நாடு தொழில் முதலீடு பொது மேலாளர் வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் டி.எஸ்.உதயசங்கர் வாழ்த்திப் பேசினார்.

முகாமில் 150-க்கும் மேற் பட்ட பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முடிவில், பொருளாளர் உஷா நந்தினி நன்றி தெரிவித்தார். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in