வேளாண் பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் :

வேளாண் பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்  :
Updated on
1 min read

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 2-ம் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த படிப்பு ஒரு ஆண்டு, 2 பருவங்கள் கொண்டதாகும்.

கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்தவித கல்வி படித்திருந்தாலும் சேர்ந்து கொள்ளலாம். தமிழ்வழிக் கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். இந்த படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சிமருந்து கடை, விதைகடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும் இடு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் ஆகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம் என்கிற முகவரில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in