

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகாவைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி அனு(21). இவர், வாலாஜாபாத் அருகேயுள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து, பெரும்புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் கணவன் - மனைவி இருவரும் சந்தித்து பேசியதாகத் தெரிகிறது. அப்போது, குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த அனுசம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதையடுத்து, அதே கத்தியால் பாலமுருகன் தன்னைத்தானே குத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த கணவரை மீட்டுசிகிச்சைக்காக செங்கை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.