Published : 16 Aug 2021 03:22 AM
Last Updated : 16 Aug 2021 03:22 AM

கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - சுதந்திர தினவிழா கொண்டாட்டம் : தேசியக்கொடி ஏற்றி மாவட்ட ஆட்சியர்கள் மரியாதை செலுத்தினர்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் காவல் துறையின் அணிவகுப்பில் சிறந்த அணிவகுப்புக்கு பரிசளிக்கும் ஆட்சியர் பி.என்.தர்.

கள்ளக்குறிச்சி/கடலூர்/விழுப்புரம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடலூர் அண்ணா விளையாட்டுஅரங்கில் ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். சுதந்திர போராட்டதியாகி கடலூர் திருப்பாதிரி புலியூரை சேர்ந்த ராமாமிர்தம் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று சால்வை போர்த்தி கவுரவித்தார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 131 அரசு அலுவலர்களுக்கு சான் றிதழ் வழங்கினார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பி னர் கோ.ஐய்யப்பன், எஸ்பி சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) டெய்சி குமார், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, இணை இயக்குநர் (மருத்துவம்) ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கீழ கோபுரத்தில் பொது தீட்சிதர் கள் தேசியக் கொடியை ஏற்றினர்.சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவல கத்தில் சார்-ஆட்சியர் மதுபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அண்ணாமலை பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் துணைவேந்தர் கூட்டுக்குழுவின் உறுப்பினர் னிவாசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத் தினார். பதிவாளர் ஞானதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

இதே போல் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் எஸ்பி ஜியாவுல் ஹக், முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் பி.என்.தர், தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர்ரூ.28 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர்க ளாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.உதயசூரியன் (சங்கராபுரம்), மா.செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதே போல் விழுப்புரம் பெருந் திட்டவளாகத்தில் உள்ள காவலர் அணிவகுப்புமைதானத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தேசியக்கொடி ஏற்றி வைத் தார். கடந்த மாதம் பழைய பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கீழே கிடந்த 10 பவுன் தங்க நகையினை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த டீ கடையில் பணியாற்றும் விஜயகுமாரின் நேர்மையினை பாராட்டி சாலாமேடு பகுதி யில் வீட்டு மனைப்பட்டாவினை வழங்கினார். பின்னர் கோலியனூர் பகுதிக்கு உட்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஆட்சியர் நேரில் சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார். தியாகி அபரன்ஜி குப்தா மனைவி சுலோச்சனாக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தியபோது அவர் கரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கினார். இதே போல் 331 பயனாளிகளுக்கு ரூ.1,67,91,311 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டிஐஜி பாண்டியன், எஸ்பிநாதா, மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன், முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவைதேவி, திட்ட இயக்குநர் காஞ்சனா, வருவாய் கோட்டாட் சியர் அரிதாஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழுப்புரம் - பாண்டிச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x