திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா :

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா :
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் கணேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் துணைவேந்தர் மாதேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாநகராட்சியில் ஆணையாளர் சிவசுப்பி ரமணியன் தேசியக் கொடியை ஏற்றினார்.

எம்.வி.எம்., மகளிர் கல்லூரியில் முதல்வர் லட்சுமி தேசியக் கொடியை ஏற்றினார். மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தேசியக் கொடியை ஏற்றினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு இடங்களில் மாநகர தலைவர் மணிகண்டன் தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது.

விவேகானந்தா நகரில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தியாகி பூலூர் செட்டியார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கோட்டச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in