கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 150 பேருக்கு நற்சான்றிதழ் : சுதந்திர தினவிழாவில் தூத்துக்குடி ஆட்சியர் வழங்கினார்

தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வழங்கினார். உடன் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.  படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வழங்கினார். உடன் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயலாற்றிய 150 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலை 9.03 மணிக்கு மைதானத்துக்கு வந்த ஆட்சியரை, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றார். காலை 9.05 மணிக்கு தேசிய கொடியை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஏற்றிவைத்தார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிட்டார். சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டார்.

காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி மற்றும் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 48 பேருக்கும், கரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயலாற்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 150 பேருக்கும் நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். ரூ. 29,92,872 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா ஊரடங்கு காரணமாக மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற வில்லை. முக்கியமான நபர்கள் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர். 33 தியாகிகளின் வாரிசுகளுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் நேரடி யாக அவர்களது வீடுகளுக்கே சென்று பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in