அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின கோலாகலம் :
தூத்துக்குடி மாநகராட்சி அலுவல கத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆணையர் தி.சாரு தேசிய கொடியேற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில் விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, விமான நிலைய பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி தேசிய கொடியேற்றினார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதல்வர் (பொ) ந.வ.சுஜாத்குமார் தேசிய கொடியேற்றினார்.
தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் அருட் தந்தை பி.ராயப்பன் தேசிய கொடியே ற்றினார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி லூசியா ரோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சர்வசமய அமைதி குழு உதவி தலைவர் தர்மராஜ் தேசிய கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை எமல்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி கின்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் வணிகவரித் துறை அலுவலர் கே.கலையரசன் தேசிய கொடியேற்றினார். பயிற்சி மைய நிறுவனர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயா சண்முகம் தலைமை வகித்தார். மாநகராட்சி மருத்துவர் பொ.டேனியல் ஜெயராஜ் தேசிய கொடியேற்றினார்.
தூத்துக்குடி தபால்தந்தி காலனியில் ஏ.எம்.கிருஷ்ண பிள்ளை தொடக்கப்பள்ளியில் மடத்தூர் ஆரம்ப சுகாதார மையம் செவிலியர் ஆர்.வசந்தி முன்னிலையில், செவிலியர் மணிமேகலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தூத்துக்குடி கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜேம்ஸ் சுந்தர் சிங் தேசிய கொடியேற்றினார்.
சாகுபுரம் கமலாவதி பள்ளியில் பள்ளி டிரஸ்டி ஜி.னிவாசன் தேசியக் கொடியேற்றினார். திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அரசு மருத்துவமனை மருத்துவர் பாபநாசகுமார் தேசிய கொடியேற்றினார்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனி பகுதியில் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாநில துணைத் தலைவர் எம்.சொக்க லிங்கம் தேசிய கொடியேற்றினார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கழுகுமலை பேரூராட்சியில் நிர்வாக அலுவலர் ஆ.முருகன், கயத்தாறு பேரூராட்சியில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நாடார் உறவின் முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ், நாடார் மேல்நிலைப்பள்ளியில் நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கே.ஆர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தேசியக் கொடி ஏற்றினார்.
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி, நாடார் நடுநிலைப்பள்ளியில் நாடார் உறவின் முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ் தேசியக் கொடி ஏற்றினார். காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ரவிமாணிக்கம் தேசிய கொடியை ஏற்றினார். கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கல்லூரி முதல்வர் சாந்திமகேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார். பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அங்காள ஈஸ்வரி, இலுப்பையூரணி தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளியில் அரசு மருத்துவமனை மருத்துவர் கமலா, கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சந்தனமாரியம்மாள், ஈ.வே.அ.வள்ளிமுத்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிச் செயலாளர் வேல்முருகன், ஈராச்சி பரிமேலழகர் இந்து நடுநிலைப்பள்ளியில் பள்ளிச் செயலர் தங்கமாரியப்பன், கோவில்பட்டி மத்திய நகர் அரிமா சங்கத்தில் அரிமா மாவட்டத்தின் 2-ம் துணை ஆளுநர் பிரான்சிஸ் ரவி, கோவில்பட்டி காந்தி மண்டப வளாகத்தில் காந்தி மண்டப பொறுப்பாளர் திருப்பதிராஜா, கரா வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் முன்னாள் ராணுவ வீரர் தனசேகரன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அலுவலகத்தில் ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ஜி.ரமேஷ், கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர். நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் முனியசாமி தேசிய கொடியேற்றினார். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் சுசிலா தனஞ்செயன், விளாத்தி குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றினார். விளாத்திகுளம் வட்டார நூலகத்தில் முன்னாள் ராணுவ வீரர் கண்ணண் தேசிய கொடியை ஏற்றினார்.
கன்னியாகுமரி
விஜய் வசந்த் எம்.பி.,
பத்மநாபபுரம் நகர பாஜக சார்பில் தக்கலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ அதிகாரி சசீதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
