

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிரதான நுழைவுவாயில் கதவுகளுக்கான செலவு ரூ.80 ஆயிரத்தை, பள்ளி வளர்ச்சி குழுத் தலைவர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் எஸ்.கே.டி. மணி ஆகியோர் ஏற்பாட்டின்படி, பள்ளியின் நடைப்பயிற்சி குழுவினர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த தொகையை, பள்ளித் தலைமையாசிரியர் கே.பழனிச்சாமி முன்னிலையில் அவர்கள் வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் பி.கே.முரளி நன்றி கூறினார். பள்ளி வளர்ச்சி குழுவினர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் அமைப்பினர், நடைப்பயிற்சி அமைப்பினர், பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.