

திருப்பூர் மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் வெளியிட்ட அறிக்கையில், "100 சதவீத கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீதான புகார் அளிக்க ஏதுவாக, திருப்பூர் மாவட்டத்துக்கென tiruppurschooleductaion2021@gmail.com என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீத கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீதான புகார்களை, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மேற்படி இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.