

தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமலா அருளரசி. இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அமலதாஸும் கல்லூரி இணை பேராசிரியராக உள்ளார். கடந்த மாதம் 12-ம் தேதி அமலா அருளரசியின் செல்போன் எண்ணுக்கு அவர் பணியாற்றும் கல்லூரியின் முதல்வர் படத்துடன் வெளிநாட்டு வாட்ஸ்அப் எண்ணில் இருந்து ‘‘அமேசான் பே ஈ- கிஃப்ட் கார்டு’’ வாங்கி அனுப்புமாறு லிங்க் வந்துள்ளது.
இதையடுத்து, ‘‘அமேசான் பே ஈ கிஃப்ட் கார்டை” ரூ.50 ஆயிரத்துக்கு வாங்கிய பேராசிரியை அமலா அருளரசி, வெளிநாட்டில் இருந்து வந்த “லிங்குக்கு” அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், அதே நபர் அதே செல்போன் எண்ணில் இருந்து மீண்டும் தொடர்புகொண்டு ரூ.45,000 “கூகுள் பே கிப்ட் கார்டு” வாங்கி தர கேட்டதால், சந்தேகமடைந்த அமலா அருளரசி தனது கணவர் மூலம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தார். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம்குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான மோகன்பாபு (26) மற்றும் சங்கர் (27) எனத் தெரியவந்தது. இருவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
செல்போனுக்கு பணம் கேட்டு வரும் லிங்க் எதையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஆன்லைன் மூலம் மோசடி நடைபெற்றால் உடனடியாக 155260 என்ற சைபர் குற்றப்பிரிவு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள் ளார்.
செல்போனுக்கு பணம் கேட்டு வரும் லிங்க் எதையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.