

திருப்பூர் - அவிநாசி சாலை முருங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிகிருஷ்ணன் (29). திருப்பூர் மாநகர ஊர்க்காவல்படை வீரர். பிச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் துர்காதேவி (25). கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம்செய்துகொள்ளுமாறு ஜோதிகிருஷ்ணனிடம் துர்காதேவிகூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். விரக்தியடைந்த துர்காதேவி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், ஜோதிகிருஷ்ணனை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.